hair growth



பொதுவாக எல்லா பெண்களும் நீளமான தலைமுடி வளரனுதான் ஆச படுவாங்க.இந்த நீளமான அடர்த்தியான முடிய வளர என்ன பண்ணனும்னு சில தகவல். 
  1. உணவுமுறை 
  2. பயன்படுத்தும் எண்ணெய் 
  3. சீகைக்காய்
உங்க Hair நீளமா அடர்த்தியா வளருனும்னா நீங்க சாப்பிடும் சாப்பாட்டுல கொழுப்புசத்து அதிகமா இருக்கனும்.

கொழுப்புசத்து தரக்கூடிய உணவு பொருட்கள் :
      
தேங்காய், தேங்கா எண்ணெயிலையும் கூடுதலா கொழுப்புசத்து இருக்கு அத அதிகமா பயன்படுத்தனும்.அது மட்டும் இல்லாம கூடுதலா நெய், வெண்ணெய்யும் சேத்து சாப்பிட்டால் இன்னும் கூடுதலா hair வளரும்.

மேலும் சேத்துக்கொள்ள வேண்டிய உணவு பொருட்கள் :  

கோதுமையோட பருப்புவகையும் சேர்த்து சாப்பிட்ட இன்னும் நல்லது.அதுமட்டும் இல்லாமல் எல்ல வகையான கீரையும் உணவுல சேத்துக்கிடலாம். பீட்ருட் , முள்ளங்கி அவ்வப்போது உணவுல சேத்துக்கிடனும்.
தக்காளி பழம் தலைமுடி ரொம்ப அடர்த்தியா வளர உதவுது அதுனால நீங்க தக்காளி பழத்த உணவுல எடுத்துக்கொள்ளுவது இல்லாமல் தனியவாவும் அவ்வபோது சாப்பிடலாம்.


tamatoo


 
மேலும் பூசணிக்காய் ,வெள்ளரிக்காய் ,சின்ன வெங்காயம், காரட், பூண்டு, கறிவேப்பிலை இத எல்லாத்தையும் அன்றாட உணவுல சேத்துகொள்ள வேண்டும்.
 
பொதுவா அசைவத்துல கொழுப்புசத்து அதிகம் இருக்கும் ஆகவே அசைவதையும் சாப்பிடலாம்.
   
அடுத்ததா நம்ப தினமும் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் பொருலாளும் hair அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரும்.

தேங்காய் எண்ணெய் :

பொதுவா எல்லாரும் பயன்படுத்திட்டுவற எண்ணெய் இதுதான். நீங்க தேங்காயெண்ணைய பயன்படுத்திட்டு வந்தாலும்  சில பேருக்கு தலைமுடி உதிரும் இதுக்கு கரணம் அந்த எண்ணெய் சுத்தமான தேங்காயெண்ணையா இருக்காது. ஆகவே நீங்க எண்ணெய் வாங்குபோது சரியானதா வாங்கணும்.

கறிவேப்பிலை எண்ணெய் :

கறிவேப்பிலை எண்ணெய்  பயன்படுத்தினா தலைமுடி நீளமா, கருமையா இருக்கும். இந்த எண்ணெய நீங்களே தயாரிசிக்கிடலாம். பணம் கொடுத்துதான் வாங்கணும்னு அவசியம் இல்லை.

செய்முறை :
   
கறிவேப்பிலை இலைய  எடுத்து நிழல்லஅறப்பதத்துக்கு உலரவைக்கும். அது உலந்ததுக்கு அப்புறம் எடுத்து பொடி பண்ணிவச்சிக்கிடனும்.ஒரு பத்திரத்தை எடுத்து அதுல 500 மில்லி தேங்காயெண்ணைய ஊத்தி மிதமா சுடவைக்கணும்.அந்த எண்ணெய் சுட ஆரம்பிச்சதோட அரச்சி வச்சியிருந்த கறிவேப்பிலை இலை 100 கிராம் எடுத்து அந்த எண்ணெய்ல போட்டு மிதமா சூடுபடுத்தனும்.அந்த இலை ஓட சாறு எண்ணெய்ல இறங்குறவரரைக்கும் 
சூடுபடுத்தனும்.சூடுபண்ணுன அந்த எண்ணெய எடுத்து ஒரு வெள்ள துணில வடிகட்டி ஆறவாசத்துக்கு பின்பு பயன்படுத்துங்க.
 
மருதாணி,செம்பருத்தி, கறுவேப்பிலை எண்ணெய் :
 
இந்த எண்ணெய் hairgrowth கருமையாவச்சி இருக்கும்.அதுமட்டும் இல்லாம முடி அடர்த்தியா வளர செய்யும். இதுவும் பணம் கொடுத்து வாங்க தேவையில்லை.

செய்முறை : 
 
மருதாணி இலை, கறிவேப்பிலை இலை ,செம்பருத்தி இலை மூன்றையும் எடுத்து நல்ல சுத்தம் செய்ஞ்சிட்டு அத சூரிய வெளிச்சம் படாத இடத்துல உலரவைக்கணும்.நல்ல உலர்ந்த பிறகு எல்லாதையும் நல்லா மாவா அரசிக்கிடனும்.அந்த  மாவ எடுத்து தேங்காயெண்ய கொஞ்சமா ஊத்தி சின்ன சின்ன உருண்டையா பண்ணிக்கிடனும். 

அந்த உருண்டையா சூரிய வெளிச்சத்துல நல்ல காயவைக்கணும். உலந்ததுக்கு பின்பு அந்த உருண்டைய எடுத்து தேங்காயெண்ணெய்ல போட்டு நீங்க தினமும் பயன்படுதலாம்.

சீகைக்காய் : 

shampoo எல்லாரும் பயன்படுத்துவாங்க அதுக்கு பதிலா இயற்கையா தயாரிக்கிற சீகைக்காய பயன்படுத்துன தலைமுடியானது அடர்த்தியா வளரும். இத நம்ப வீட்டுலையே செய்யலாம். இந்த செய்முறைல 1 கிலோ சிகைக்காய் எப்படி செய்றதுன்னு  பாக்கலாம்.

செய்முறை :

சீகைக்காய் 1 கிலோ, வெந்தயம் காக்கிலோ, பாசிப்பயறு 100 கிராம் , கார்போகஅரிசி 100 கிராம், எலுமிசை பழம் 5 -நல்ல உலர்ந்த நிலைல, வெட்டிவேர் 10கிராம்,உலர்ந்த ரோஜா இதழ் 30கிராம், கறிவேப்பிலை 30 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 30 கிராம், மருதாணி இலை 30 கிராம், வேப்பஇலை 30 கிராம், ஆவாரம்பூ 30 கிராம் , பூந்திக்காய் 100கிராம் எல்லாத்தையும் நல்ல மாவு போல அரசிட்டு வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்துங்க.

சீகைக்காய் பயன்படுத்துறனால நம்ப தலைமுடி உதிராது அடர்த்தியா வளரும்.